வெளிநாட்டு ஆசை காட்டி80 லட்சம் மோசடி செய்தவர் கைது.!
[2024-10-16 13:02:19] Views:[19]
வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாக கூறி ஆசை காட்டி இளைஞனிடம் 80 லட்ச ரூபாயை மோசடி செய்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மல்லாவியைச் சேர்ந்த ஒருவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரை வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாக கூறி அவரிடமிருந்து 80 லட்ச ரூபாயை பெற்றுக்கொண்டு, இளைஞனை வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்காமல் மோசடி செய்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் குறித்த இளைஞன் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவிடம் முறைப்பாடு செய்திருந்தார். குறித்த முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
இந்நிலையில், பணத்தினை பெற்றுக்கொண்டவரை யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்த பொலிஸர் விசாரணைகளின் பின்னர் நேற்றைய தினம் ஊர்காவற்துறை நீதவான் நீதமன்றில் முற்படுத்திய போது, சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.










