பொலிஸ் உத்தியோகஸ்தரின் வீட்டில் திருடியவருக்கு ஏற்பட்ட நிலை.!
[2024-10-16 12:19:04] Views:[11]
பொலிஸ் உத்தியோகத்தரது வீட்டில் நகைகள் மற்றும் பணம் என்பன களவாடிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த வெற்றிக்கிழமை யாழ்ப்பாணம், நவாலி பகுதியில் வசிக்கும் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரது வீட்டில் ஆறரை பவுண் நகை மற்றும் 29 ஆயிரம் ரூபா பணம் என்பன கொள்ளையிடப்பட்டது.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை நேற்றையதினம் (16) கைது செய்த யாழ்ப்பாண பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் சந்தேக நபரிடம் இருந்து மூன்றரைப் பவுண் நகையை மீட்டனர்.
விசாரணைகளின் பின்னர் பொலிஸார் சந்தேக நபரை நீதிமன்றத்தில் முற்படுத்திய போது விளக்கமறியலில் வைக்குமாரு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரதான சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.










