காதல் தகராறு; வீடு வாகனங்கள் மீது தாக்குதல்: மோட்டார் சைக்கிள் தீக்கரை !
[2024-10-15 13:13:49] Views:[18]
காதலியுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக காதலியின் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்டு, வாகனங்களும் சேதமாக்கப்பட்ட சம்பவம் ஒன்று யாழ்ப்பாணம், மானிப்பாய் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இணுவில் வீதி, மானிப்பாயில் வசிக்கும் சந்திரபாலி அஹெனியா என்பவரது வீடே நேற்று (14) இரவு தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.
வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல், வீட்டின் மீது தாக்குதலை மேற்கொண்டதுடன், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெண்ணின் மோட்டார் சைக்கிளை தீ மூட்டி, முச்சக்கர வண்டி மற்றும் பட்டா வாகனம் என்பவற்றின் மீதும் தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளது.
மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணைகளின் போது, வீட்டில் வசிக்கும் யுவதிக்கு இளைஞன் ஒருவருக்கும் காதல் தொடர்பு இருந்ததாகவும், தற்போது இருவரும் முரண்பட்டு பிரிந்துள்ளமையால் காதலனே குறித்த தாக்குதலை மேற்கொண்டதாக தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும், சந்தேக நபரான காதலனை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.










