yarlathirady.com

ஊடக பணியாளர் மீது தாக்குதல்; சந்தேகநபர்கள் கைது !

[2024-10-15 12:29:26] Views:[21]

யாழப்பாணத்தில் ஊடக பணியாளர் ஒருவர் மீது தாக்குதல் நடத்திவிட்டு தலைமறைவாகி இருந்த சந்தேகநபர்கள் இருவரையும் கைது செய்துள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்தில் இயங்கும் தொலைக்காட்சி ஒன்றில் தொழிநுட்பவியலாளராக பணியாற்றும் விபூஷண் என்பவர் மீது கடந்த வெள்ளிக்கிழமை யாழ். நகர், கஸ்தூரியார் வீதியில் தாக்குதல் நடத்தப்பட்டது.

தாக்குதலுக்கு இலக்கான ஊடக பணியாளர் வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த வேளை, பின்னால் பிறிதொரு மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் அவரை வழி மறித்து, ஏன் தாங்கள் முந்தி செல்வதற்கு வழி விடவில்லை என கேட்டு, தலைக்கவசத்தால் மிக மோசமாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றிருந்தனர்.

இத்தாக்குதல் தொடர்பிலான வீடியோ காட்சிகள் கடை ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராக்களில் பதிவாகியிருந்தது. அதனை அடிப்படையாக கொண்டு பொலிஸார் தாக்குதலாளிகளை இனம் கண்டு அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்திருந்தனர்.

சந்தேகநபர்கள் இருவரும் தலைமறைவாகி இருந்த நிலையில், நேற்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாண பொலிஸார் அவர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் இருவரும் ஓட்டுமடம் மற்றும் தாவடி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும், அவர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


சினிமாசெய்திகள்
வெளிவந்த விஜய்யின் ஜனநாயகன் படத்தின் வெளியீட்டு திகதி தொடர்பான விவரம்...!
2026-04-29 17:16:58
பல வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் விஜய் தனது கடைசிப்படமாக ஜனநாயகன் என்ற படத்தில் நடித்துள்ளார்
'திரிஷ்யம்-3' திரைப்படத்தின் அதிரடி அறிவிப்பு..!
2026-04-26 21:19:32
மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களிலொன்றான திரிஷ்யம், கடந்த 2013ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியாகி திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வெறும் ரூ.5 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம், ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் வெற்றியால், இப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.