திருகோணமலையில் இருவேறு விபத்து பெண் ஒருவர் பலி!
[2024-10-15 11:18:50] Views:[14]
இன்று (15) காலை திருகோணமலை - கந்தளாய் பகுதியில் ஒரே நேரத்தில் வெவ்வேறு இடங்களில் இரு விபத்துக்கள் இடம்பெற்றுள்ளது இதில் ஒரு விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதன்படி கந்தளாய் - வெலிங்கடன் சந்தியில் மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து, வீதியை கடக்க முற்பட்ட பெண் மீது மோதியதில் பெண் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்
பேராரைச் சேர்ந்த 69 வயதுடைய இரு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, கந்தளாய் பேராற்று வெளி, கண்டி பிரதான வீதியில் ஏற்பட்ட மோட்டார் சைக்கிள் விபத்து ஒன்றில் இரண்டு வயது சிறுவன் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் கந்தளாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விபத்து சம்பவங்கள் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.










