யாழில் வெடிப்பு சம்பவம்! இளைஞன் படுகாயம்;
[2024-10-14 11:43:37] Views:[12]
யாழ்ப்பாணம், கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளளார்.
நேற்றைய தினம் இடம்பெற்ற குறித்த வெடிப்பு சம்பவத்தில் கொடிகாமம் பகுதியை சேர்ந்த வில்வராசா தனுஷன் (வயது 19) என்ற இளைஞனே படுகாயமடைந்துள்ளார்.
கொடிகாமம் பகுதியில் உள்ள வயல் காணி ஒன்றில் குறித்த இளைஞன் வேலை செய்து கொண்டிருந்த வேளை நிலத்தினுள் புதையுண்டிருந்த வெடி பொருள் வெடித்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.










