சீரற்ற காலநிலை காரணமாக சில பாடசாலைகளுக்கு விடுமுறை;
[2024-10-14 11:13:35] Views:[17]
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சில கல்வி வலயங்களில் உள்ள பாடசாலைகளை இன்றும் நாளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கொழும்பு கல்வி வலயத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் இன்று மாத்திரம் மூடப்படும் என மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், கம்பஹா மற்றும் களனி கல்வி வலயங்களில் உள்ள பாடசாலைகளுக்கும் இன்று மற்றும் நாளை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் கொலன்னாவ மற்றும் கடுவலை கல்வி வலயத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் இன்றும், நாளையதினமும் மூடப்படவுள்ளது.










