yarlathirady.com

தொடரும் சீரற்ற வானிலை.!
பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்வு;
தொடர்ந்தும் வெள்ளம், மண்சரிவு அபாய எச்சரிக்கை!

[2024-10-14 10:45:50] Views:[14]

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 3 பேர் உயிரிழந்துள்ளதுடன், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது மேலும், வெள்ளம் மற்றும் மண்சரிவு அபாய எச்சரிக்கையும் தொடர்ந்தும் அமுலில் உள்ளன.

சீரற்ற வானிலை காரணமாக நாட்டில் 12 மாவட்டங்களின் 69 பிரதேச செயலகங்களில் வாழும் 100,000 க்கு மேற்பட்ட பொதுமக்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதன்படி, 3 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளனவும், 34,492 குடும்பங்களைச் சேர்ந்த 134,484 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,

240 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் ஒரு வீடு முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் 1753 குடும்பங்களைச் சேர்ந்த 6963 பேர் தற்போது 81 பாதுகாப்பு இடங்களில் தங்கியுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை நிலவும் மழையுடனான கால நிலையைத் தொடர்ந்து ஆறுகளின் நீர்மட்டமும் அதிகரித்து வருவதாக நீர்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, களுகங்கையின் நீர்மட்டமானது மகுர பகுதியில் அதிகரித்து வருவதுடன், ஜின் கங்கையின் நீர்மட்டமானது பத்தேகம பகுதியிலும் அதிகரித்து வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த ஆறுகளை அண்டிய தாழ் நிலப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், களனி கங்கையின் நலகம பகுதியிலும் அத்தனகலு ஓயாவின் துனமலே பகுதியிலும் வெள்ளம் ஏற்படுவதற்கான வாய்ப்பு காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, கொழும்பு, நுவரெலியா, இரத்தினபுரி, களுத்துறை, கேகாலை, காலி, கம்பஹா மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, கொழும்பு மாவட்டத்தின் சீதாவாக்கை மற்றும் பாதுக்க பிரதேச செயலகப்பிரிவுகளுக்கும், இரத்தினபுரி மாவட்டத்தின், எஹலியகொட, கிரியெல்ல, கலவானை, இரத்தினபுரி, குருவிட்ட மற்றும் எலபாத்த ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும் 2ஆம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கேகாலை மாவட்டத்தின் மாவனெல்ல, கேகாலை, வரக்காபொல, தெஹியோவிட்ட மற்றும் யட்டியந்தோட்ட ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும், களுத்துறை மாவட்டத்தின் ஹொரணை, வலல்லாவிட்ட, தொடங்கொட, இங்கிரிய மற்றும் மத்துகம ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் 2ஆம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


சினிமாசெய்திகள்
வெளிவந்த விஜய்யின் ஜனநாயகன் படத்தின் வெளியீட்டு திகதி தொடர்பான விவரம்...!
2026-04-29 17:16:58
பல வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் விஜய் தனது கடைசிப்படமாக ஜனநாயகன் என்ற படத்தில் நடித்துள்ளார்
'திரிஷ்யம்-3' திரைப்படத்தின் அதிரடி அறிவிப்பு..!
2026-04-26 21:19:32
மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களிலொன்றான திரிஷ்யம், கடந்த 2013ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியாகி திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வெறும் ரூ.5 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம், ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் வெற்றியால், இப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.