yarlathirady.com

இணையவழி நிதி மோசடி ;
கைதான 126 சீனர்கள் தொடர்பில் வெளியான திடுக்கிடும் தகவல்.!

[2024-10-13 11:56:01] Views:[11]

இணையவழி நிதி மோசடியில் ஈடுபட்ட மேலும் 126 சீன பிரஜைகளை நேற்று (12) கண்டி, குண்டசாலையில் உள்ள சுற்றுலா விடுதியொன்றில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹோட்டல் நிர்வாக அதிகாரிக்கு தெரிந்தே, சந்தேகத்திற்குரிய சீன பிரஜைகள் ஹோட்டலின் தனிப் பகுதியை முன்பதிவு செய்து இவ்வாறு இணைவழி நிதி மோசடி செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

திட்டமிட்டு பாரிய அளவில் மக்களின் பணத்தை கொள்ளையடிக்கும் மோசடிகள் தொடர்பில் கடந்த சில நாட்களாக பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த சில நாட்களாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்புகளில் சமூக ஊடகங்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகள் ஊடாக நிதி மோசடிகளில் ஈடுபட்ட வெளிநாட்டு பிரஜைகள் பலர் சிக்கியுள்ளனர்.

இந்த பின்னணியில் இணைய மோசடியில் ஈடுபட்ட மேலும் 17 யுவதிகள் உள்ளிட்ட 126 சீன பிரஜைகள் கண்டி குண்டசாலையில் உள்ள சுற்றுலா விடுதியில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரி அருண ஜயசிங்கவுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் கண்டி பொலிஸார் உட்பட பல பொலிஸ் குழுக்கள் இணைந்து மேற்படி அதிரடி சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டன.

சோதனை நடவடிக்கையின் போது மேலும் பல சீனர்கள் அந்த ஹோட்டலுக்குப் பின்னால் உள்ள மகாவலி கங்கை ஊடாக தப்பி ஓடியதாக தெரிவிக்கப்படுகிறது.

சோதனையிடப்பட்ட இடத்தில் இருந்து 120 மடிக்கணினிகள், 14 கணினிகள் மற்றும் 300இற்கும் மேற்பட்ட கையடக்க தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், சந்தேகத்திற்குரிய சீன பிரஜைகள் கடந்த செப்டம்பர் 30 அன்று இந்த சுற்றுலா ஹோட்டலுக்கு வந்து 47 அறைகளை முன்பதிவு செய்ததோடு, பிரதான விருந்து கூடம், சாப்பாட்டு அறை மற்றும் நீச்சல் குளம் ஆகியவற்றுக்குள் ஹோட்டல் ஊழியர்களோ வெளியாட்களோ நுழைய முடியாத வகை தடை செய்யப்பட்ட பகுதியாக பயன்படுத்தினர்.

அதன்படி, ஹோட்டல் நிர்வாகம் தெரிந்தே இணையவழி நிதி மோசடி இடம்பெற்றதாகவும், இரு தரப்பினருக்கும் இடையேயான தகவல் பரிமாற்றத்துக்கு சீன மொழி பெயர்ப்பாளரையும் பயன்படுத்தியிருப்பதும் தெரியவந்துள்ளது.

8 நாட்களுக்கு ஒருமுறை ஹோட்டல் கட்டணம் செலுத்தும் ஒப்பந்தத்தின் அடிப்படையில், இந்த சீனர்கள் முதல் 8 நாட்களுக்கு உணவு மற்றும் பானங்களுக்காக மாத்திரம் 46 இலட்சம் ரூபா செலுத்தியுள்ளனர்.

நேற்றைய சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டவர்களில் அண்மையில் ஹம்பாந்தோட்டையில் இதேபோன்றதொரு இடத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது தப்பிச் சென்ற 26 சீன பிரஜைகளும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.


சினிமாசெய்திகள்
வெளிவந்த விஜய்யின் ஜனநாயகன் படத்தின் வெளியீட்டு திகதி தொடர்பான விவரம்...!
2026-04-29 17:16:58
பல வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் விஜய் தனது கடைசிப்படமாக ஜனநாயகன் என்ற படத்தில் நடித்துள்ளார்
'திரிஷ்யம்-3' திரைப்படத்தின் அதிரடி அறிவிப்பு..!
2026-04-26 21:19:32
மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களிலொன்றான திரிஷ்யம், கடந்த 2013ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியாகி திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வெறும் ரூ.5 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம், ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் வெற்றியால், இப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.