மட்டு போதனா வைத்தியசாலையில் சிசிடிவி கமராவை திருடிய ஊழியர் கைது!
[2024-10-13 10:54:12] Views:[15]
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராவை திருடிய அதே வைத்தியசாலையில் கடமையாற்றிவரும் 51 வயதுடைய சிற்றூழியர் ஒருவரை நேற்று முன்தினம் (11) கைது செய்ததாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த வைத்தியசாலையில் கடமையாற்றிவரும் குறித்த சிற்றூழியர் சம்பவதினமான நடந்த வியாழக்கிழமை (10) இரவு விடுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமரா ஒன்றை கழற்றி திருடும் வீடியோ காட்சி திருடப்பட்ட சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளது.
இதனை அவதானித்த வைத்தியசாலை நிர்வாக பணிப்பாளர் பொலிசாருக்கு செய்த முறைப்பாட்டையடுத்து குறித்த ஊழியரை கைது செய்து நீதிமன்றில் ஆஜயர்படுத்த நடவடிக்கை எடுத்ததாக பொலிசார் தெரிவித்தனர்.










