பொலிஸ் வீட்டிலேயே கைவைத்த திருடன்.!
[2024-10-13 10:02:05] Views:[15]
யாழ்ப்பாணத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டில் நகைகள் மற்றும் ஒரு தொகை பணம் திருடப்பட்டுள்ளது.
குறித்த திருட்டு சம்பவம் யாழ்ப்பாணம், நவாலி பகுதியில் வசிக்கும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டில் நேற்று (12) இரவு இடம்பெற்றுள்ளது.
குளியலறை ஊடாக வீட்டிற்குள் உள்நுழைந்த திருடர்கள், ஆறரை பவுண் நகை மற்றும் 29000 ரூபா பணம் என்பவற்றை திருடிச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.










