கம்பஹா மாவட்டத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!
[2024-10-12 12:33:31] Views:[13]
நிலவி வரும் கடும் மழை காரணமாக அத்தனகலு ஓயாவின் நீர் மட்டம் வெள்ள மட்டத்தை எட்டியுள்ளதாக கம்பஹா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதி பணிப்பாளர் அஜித் நிஷாந்த தெரிவித்தார்.
நேற்று (11) இரவு 9.00 மணி நிலவரப்படி, நீர்மானியின் நீர்மட்டம் 5.54 மீற்றராக காணப்படுவதாகவும், இதனால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறும் அவர் எச்சரித்துள்ளார்.
கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ள வீதிகள் நீரில் மூழ்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.










