உலக உணவுத் திட்டம் தொடர்ந்து இலங்கைக்கு ஆதரவு:
[2024-10-12 12:18:26] Views:[15]
தற்போது நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் புதிய வேலைத்திட்டங்கள் மூலம் இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக உலக உணவுத் திட்டத்தின் பிரதிநிதிகள் குழு அறிவித்துள்ளது.
நேற்றைய தினம் உலக உணவுத் திட்டத்தின் பிரதிநிதிகள் குழுவினருக்கும், ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்கவுக்கும் இடையில் ஜனாதிபதி செயலகத்தில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.
இதன்போது உலக உணவுத் திட்டத்தின் ஊடாக இலங்கையில் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் வேலைத்திட்டத்தைத் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துவதற்கு உலக உணவுத் திட்டத்தின் பிரதிநிதிகள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் உணவு நெருக்கடி நிலைமை தற்போது குறைவாக உள்ள போதிலும், தேவை ஏற்படும் போது புதிய வேலைத்திட்டங்கள் மூலம் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக அக்குழுவினர் ஜனாதிபதியின் செயலாளரிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.










