yarlathirady.com

இலங்கை பொருளாதார மறுசீரமைப்பை தொடர வேண்டும்; உலக வங்கி

[2024-10-12 10:44:51] Views:[14]

இந்த வருடத்திற்கான இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 4.4 சதவீதத்தை எட்டும் என உலக வங்கி கணித்துள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பிருந்த எதிர்பார்க்கைகளை விட இது இரட்டிப்பாகும் என என உலக வங்கி எதிர்வு கூறியுள்ளது.

சுற்றுலாத்துறை மற்றும் தொழில்துறைகளின் வலுவான செயற்றிறன் மூலம் இந்த வளர்ச்சி அடையப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் இலங்கையின் தற்போதைய அபிவிருத்தி மீட்சி பலவீனமாக உள்ளது எனவும், பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பேணுதல் மற்றும் கடன் மறுசீரமைப்பை வெற்றிகரமாக முன்கொண்டு செல்ல வேண்டும் எனவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.

அத்துடன் நாட்டில் வறுமையைக் குறைக்க கட்டமைக்கப்பட்ட மறுசீரமைக்கப்பட்ட திட்டங்களைத் தொடர வேண்டும் என உலக வங்கி வலியுறுத்தியுள்ளது.

ஏற்றுமதியை அதிகரிப்பது, வெளிநாட்டு முதலீட்டைக் கொண்டுவரல், பெண் தொழிலாளர் பங்கேற்பை அதிகரித்தல், உற்பத்தித் திறனை மேம்படுத்தல் மற்றும் வறுமை, உணவுப் பாதுகாப்பின்மை மற்றும் நிதித் துறையில் உள்ள பாதிப்புகள் போன்ற சவால்களை எதிர்கொள்வதை நோக்கமாகக் கொண்ட முக்கிய சீர்திருத்தங்களும் உள்ளக்கப்பட வேண்டும் என உலக வங்கி அறிவுறுத்தியுள்ளது.


சினிமாசெய்திகள்
வெளிவந்த விஜய்யின் ஜனநாயகன் படத்தின் வெளியீட்டு திகதி தொடர்பான விவரம்...!
2026-04-29 17:16:58
பல வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் விஜய் தனது கடைசிப்படமாக ஜனநாயகன் என்ற படத்தில் நடித்துள்ளார்
'திரிஷ்யம்-3' திரைப்படத்தின் அதிரடி அறிவிப்பு..!
2026-04-26 21:19:32
மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களிலொன்றான திரிஷ்யம், கடந்த 2013ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியாகி திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வெறும் ரூ.5 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம், ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் வெற்றியால், இப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.