yarlathirady.com

அரச வாகன துஷ்பிரயோகம் குறித்து அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கம்.!

[2024-10-12 10:09:28] Views:[11]

அரச வாகனங்களை துஷ்பிரயோகம் செய்வது தொடர்பில் தகவல் தெரிந்தால் இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 1997 என்ற விசேட தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசால் பல்வேறு நோக்கங்களுக்காக வழங்கப்பட்ட வாகனங்கள் மோசடியாகவோ அல்லது சட்டவிரோதமாகவோ ஏதேனும் இடத்தில் மறைத்து வைக்கப்பட்டு அல்லது பிரித்து மறைத்து வைக்கப்பட்டிருந்தால். அல்லது ஏதேனும் இடங்களில் நிறுத்தி பாழடை வைத்திருந்தால் அது தொடர்பிலான தகவல்களை உடனடியாக தெரிவிக்கும்படி பொலிஸார் அறிவித்துள்ளனர்.

1997 என்ற தொலைபேசி இலக்கம் 24 மணி நேரமும் செயலில் இருக்கும் எனவும், தகவல் வழங்குபவர்களின் அடையாளம் முழுமையாகப் பாதுகாக்கப்படும் எனவும், தகவல் கொடுப்பவர்களின் அடையாளத்தை வெளியிட வேண்டிய அவசியமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உண்மைத் தகவல்களை மட்டுமே வழங்குமாறும், தவறான தகவல்களைத் வழங்குபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


சினிமாசெய்திகள்
வெளிவந்த விஜய்யின் ஜனநாயகன் படத்தின் வெளியீட்டு திகதி தொடர்பான விவரம்...!
2026-04-29 17:16:58
பல வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் விஜய் தனது கடைசிப்படமாக ஜனநாயகன் என்ற படத்தில் நடித்துள்ளார்
'திரிஷ்யம்-3' திரைப்படத்தின் அதிரடி அறிவிப்பு..!
2026-04-26 21:19:32
மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களிலொன்றான திரிஷ்யம், கடந்த 2013ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியாகி திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வெறும் ரூ.5 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம், ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் வெற்றியால், இப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.