முன்னாள் அமைச்சர் ஏக்கநாயக்க காலமானார் !
[2024-10-11 12:32:53] Views:[13]
ஐக்கிய தேசியக் கட்சியின் அனுராதபுரம் மாவட்ட பிரதம அமைப்பாளர் முன்னாள் அமைச்சர் டபிள்யூ. பி.ஏகநாயக்க (76 வயது) தனது வீட்டின் குளியலறையில் வழுக்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக அனுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.
டபிள்யூ.பி.ஏக்கநாயக்க நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அமைச்சருக்கு உணவு மற்றும் மருந்துகளை வழங்கிக் கொண்டிருந்தவர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலைக்குச் சென்றதாகவும், அமைச்சர் மட்டுமே வீட்டில் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.










