வேட்புமனு தாக்கல் இன்று நண்பகலுடன் நிறைவுறும்!
[2024-10-11 11:18:22] Views:[16]
இன்று (11) நண்பகல் 12.00 மணியுடன் 2024 பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்யும் நடவடிக்கை முடிவுறுத்தப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும், இது தொடர்பான ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய பிற்பகல் 1.30 மணி வரை அவகாசம் அளித்துள்ளதாகவும், இந்த ஆண்டு பொதுத் தேர்தலுக்காக 349 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் (2024.10.10) வரை 147 அரசியல் கட்சிகளும் 94 சுயேச்சைக் குழுக்களும் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறை சட்டத்தின் பிரகாரம், பொதுத் தேர்தல் தொடர்பில் ஒவ்வொரு வேட்பாளரும் செலவிட வேண்டிய பணத்தின் அளவு எதிர்காலத்தில் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.










