50 பயணிகளுடன் சென்ற பஸ் திடீரென தீ பற்றியது!
[2024-10-10 11:32:47] Views:[14]
காலை 07.30 மணியளவில் இரத்தினபுரி - கொழும்பு வீதியில் எம்பிலிப்பிட்டியவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ் மாதம்பே பகுதியில் சுமார் 50 பயணிகளுடன் பயணித்துகொண்டிந்த போது தீப்பற்றி எரிந்துள்ளதாகவும் இந்த விபத்தில் எவருக்கும் காயமோ அல்லது பாரிய காயமோ ஏற்படவில்லை எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
மக்களின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட போதிலும் பேருந்து முற்றாக எரிந்துள்ளதாகவும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிய வருகிறது.










