yarlathirady.com

பெண் தலைமை தாங்கும் குடும்பமொன்றுக்கு இராணுவத்தினரால் வீடு அன்பளிப்பு !

[2024-10-09 11:17:03] Views:[15]

இன்று(09) பெண் தலைமை தாங்கும் குடும்பம் ஒன்றிற்கு கல்முனை 18ஆவது விஜயபாகு காலாட் படைப்பிரிவு முகாம் இராணுவத்தினரால் வீடொன்று நிர்மாணித்து கொடுக்கப்பட்டு உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.



இலங்கை இராணுவத்தினால் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பத்துக்கு வீடு ஒன்றை நிர்மாணித்துக் கொடுக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டம், இலங்கை இராணுவத்தின் 24 வது காலாட்படை பிரிவின் கட்டளைத் தளபதி அவர்களின் ஆலோசனைக்கமைய 241 இராணுவ பிரிவின் கட்டளை அதிகாரியின் வழிகாட்டலில் அம்பாறை கல்முனை 18 ஆவது விஜயபாகு காலாட் படைப்பிரிவின் கட்டளை தளபதியின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்டம் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட சேனைக்குடியிருப்பு -1 கிராம உத்தியோகத்தர் பிரிவில் குறித்த வீடொன்றை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த மே மாதம் இடம்பெற்றது.



பின்னர் குறித்த வீடு கணவனை இழந்து 9 வயது மகள் மற்றும் 6 வயது மகனுடன் வாழ்ந்து வந்த பயனாளியான திருமதி துரைராசா சுரேஜினிக்கு தமிழ் முஸ்லீம் தனவந்தர்களின் ஒத்துழைப்புடன் இராணுவத்தினருடைய கட்டுமான பங்களிப்புடன் இந்த வீடு கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.



241 இராணுவ பிரிவின் கட்டளை அதிகாரி மற்றும் கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் உள்ளிட்டோர் வீட்டுப் பெறுநருக்கான சாவியும் தகுதியான குடும்பத்திற்கு வீட்டு உபயோகப் பொருட்களையும் அன்பளிப்புச் செய்தனர். அத்துடன் வீட்டு நிர்மாண பணியில் ஈடுபட்ட இராணுவத்தினருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



இந்நிகழ்வில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் அம்பாரை கல்முனை 18 ஆவது விஜயபாகு காலாட் படைப்பிரிவின் கட்டளை அதிகாரி உள்ளிட்ட கல்முனை வடக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.


சினிமாசெய்திகள்
வெளிவந்த விஜய்யின் ஜனநாயகன் படத்தின் வெளியீட்டு திகதி தொடர்பான விவரம்...!
2026-04-29 17:16:58
பல வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் விஜய் தனது கடைசிப்படமாக ஜனநாயகன் என்ற படத்தில் நடித்துள்ளார்
'திரிஷ்யம்-3' திரைப்படத்தின் அதிரடி அறிவிப்பு..!
2026-04-26 21:19:32
மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களிலொன்றான திரிஷ்யம், கடந்த 2013ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியாகி திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வெறும் ரூ.5 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம், ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் வெற்றியால், இப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.