இடியுடன் கூடிய மழை
[2024-10-09 10:22:52] Views:[16]
இன்று (9)வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் வடமேல் மற்றும் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் மாத்தறை மற்றும் காலி மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்வு கூறியுள்ளதாக தெரிய வருகிறது.
பிற்பகல் அல்லது இரவு வேளையில் நாட்டின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமேல், ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 MM க்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் எனவும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.










