யாழ்ப்பாணத்தில் கட்டுமரம் கவிழ்ந்ததில் கடற்தொழிலாளி ஒருவர் உயிரிழப்பு!
[2024-10-08 14:46:09] Views:[16]
யாழ்ப்பாணத்தில் கட்டுமரம் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தும்பளை லூதர் மாத கோவிலடியை சேர்ந்த 69 வயதுடைய கடற்தொழிலாளி ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சக தொழிலாளிகளால் மீட்கப்பட்டு, உடற்கூற்று பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.










