முல்லைத்தீவு - சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று தீக்கிரை
[2024-10-08 11:51:46] Views:[15]
இன்று (08) அதிகாலை முல்லைத்தீவு - சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்துளர்ந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளான.
குறித்த வீதிவழியாக சென்ற அரச பேருந்து சாரதி, நடத்துனர் இதனை அவதானித்து அயல்வீட்டினரின் உதவியுடன் தீயினை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும்
இருப்பினும் பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் தீக்கிரையாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.










