வாகன விபத்தில் ஒருவர் பலி!
[2024-10-07 10:17:55] Views:[17]
கடந்த 5ம் திகதி மாலை அம்பாறை பகுதியில் உழவு இயந்திரம் மற்றும் கனரக வாகனம் விபத்துக்குள்ளானதில் 64 வயதுடைய ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கனரக வாகனத்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிய வருகிறது.










