யாழில் உண்ணி காய்ச்சலினால் 19 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழப்பு
[2024-10-06 19:36:45] Views:[12]
உண்ணிக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட மானிப்பாயைச் சேர்ந்த யுவதி ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிய வருகிறது.
குறித்த யுவதி உண்ணிக் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தமை வைத்தியசாலையில் இனங்காணப்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து, அவருக்கு 10 நாட்களாக தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும் இருப்பினும், அந்த யுவதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வெளியாகியுள்ளன.










