மோட்டார் சைக்கிள் மற்றும் வீடு தீக்கிரை
[2024-10-06 11:17:33] Views:[13]
முள்ளியவளையில் பிரபல பாடசாலையில் கற்பிக்கும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் தங்கியிருந்த வீடு மற்றும் ஆசிரியரின் மோட்டார் சைக்கிள் முல்லைத்தீவு - முள்ளியவளை பகுதியில் இனம் தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சக ஆசிரியர்களின் உதவியுடன் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட போதும், ஆசிரியர் தங்கியிருந்த வீடு பகுதியளவில் எரிந்துள்ளதாகவும் மோட்டார்சைக்கிள் பாவிக்க முடியாத வகையில் முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.










