122 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியது !
[2024-10-05 11:01:36] Views:[14]
நேற்று(04) வரை எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை 122 சுயேச்சைக் குழுக்கள் செலுத்தியுள்ளதாக தெரிய வருகிறது.
36 சுயேச்சைக் குழுக்கள் நேற்றைய தினத்தில் மாத்திரம் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகவும் இதுவரை 22 தொகுதிகளில் 21 தொகுதிகளுக்கு சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இம்முறை தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் பணி நேற்று ஆரம்பமானதுடன், எதிர்வரும் 11ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிய வருகிறது.










