யாழ்.வடமராட்சி கிழக்கில் மோட்டார் சைக்கிள் விபத்து
[2024-10-05 10:46:15] Views:[12]
நேற்று (4) மாலை 6 மணி அளவில் யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று பகுதியில் விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
மாமுனையிலிருந்து தாளையடி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும் செம்பியன்பற்று கடற்கரை வீதியில் இருந்து பயணித்த மோட்டார் சைக்கிளும் செம்பியன்பற்று வடக்கு நாற்சந்தியில் ஒன்றுடன் ஒன்று மோதி குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் விபத்தின் போது காயமடைந்தவர்களை அயலவர்கள் மீட்டு மருதங்கேணி வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் அவர்கள் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக மந்திகை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.










