யாழில் 2.00 மணிக்குப் பின்னர் என்ன நடக்கும்?
[2024-10-04 11:16:29] Views:[12]
இன்று(04) வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட நாட்டின் சில பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்குப்பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக அறிவித்தல் வெளியாகி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஊவா மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஒரு சில இடங்களில் இன்று மாலை அல்லது இரவு வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இடி,மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களை கோரியுள்ளதாக தெரிய வருகிறது.










