விசுவமடு பகுதியில் இடம்பெற்ற கோர விபத்து - ஒருவர் மரணம்
[2024-10-03 16:01:44] Views:[9]
இன்று காலை கிளிநொச்சி - விசுவமடு பகுதியில் பேருந்து ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என தெரிய வருகிறது.
குமாரசாமிபுரம் பகுதியினை சேர்ந்த 43 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிய வருகிறது.
பேருந்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.










