எரிபொருள்களின் புதிய விலைகள்
[2024-10-01 10:26:58] Views:[16]
இன்றைதினம் (30) இலங்கையில் நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.
92 ரக ஒக்டேன் பெற்றோல் லீற்றரின் விலை 21 ரூபாவினால் குறைக்கப்பட்டு புதிய விலை 311 ரூபாவாகும்.
307 ரூபாவாக காணப்பட்ட ஓட்டோ டீசல் லீற்றரின் விலை 24 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 283 ரூபாயாகும்.
202 ரூபாவாக நிலவிய மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றில் விலை 19 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 183 ரூபாய் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது










