யாழில் மாணவனைத் தாக்கிய ஆசிரியர் கைது
[2024-09-29 12:24:34] Views:[15]
யாழ். இருபாலைப் பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவரை விஞ்ஞான பாட ஆசிரியர் காட்டுமிராண்டித்தனமாக தாக்கியுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இரு மாணவர்களுக்கிடையில் இழுபறி ஏற்பட்டதாகவும் ஒரு மாணவனை அழைத்த ஆசிரியர் தாறுமாகத் தடியாலும் கைகளாலும் தாக்கியதாகவும்
கூறப்படுகிறது
இதையடுத்து கோப்பாய் பொலிசார் குறித்த ஆசிரியரை கைது செய்துள்ளனர்.ஆசிரியரை இன்றையதினம் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிய வருகிறது.










