திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய நால்வர் கிளிநொச்சியில் கைது
[2024-09-28 12:22:36] Views:[12]
கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் திருட்டு சம்பவங்களுடன் தொடர்பட்ட நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. இதன்போது அவர்கள் பயன்படுத்திய மூன்று மோட்டார் சைக்கிள்கள் மற்றும் களவாடப்பட்ட ஒரு தொகை நகைகளும் மீட்கப்பட்டுள்ளன.
புதுக்குடியிருப்பு, கிளிநொச்சி, இராமநாதபுரம், ஒட்டுசுட்டான், முள்ளியவளை, நெடுங்கேணி ஆகிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறுபட்ட கொள்ளை சம்பவங்களுடன் குறித்த சந்தேக நபர்கள் தொடர்புபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.










