கடற்படையினரிடம் நீர்கொழும்பில் சிக்கிய மர்ம பொருட்கள்!
[2024-09-28 11:49:45] Views:[17]
நேற்றிரவு (26) ஒருதொகை பீடி இலைகளை நீர்கொழும்பு - களப்பு பகுதியிலிருந்து கடற்படையினர் கைப்பற்றியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கடற்படையினரால் மீட்கப்பட்ட 14 உரமூடைகளில் அடைக்கப்பட்ட 400 கிலோ கிராம் பீடி இலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நீர்கொழும்பு மாகாண கலால் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாகவும் தெரிய வருகிறது.










