நீராடசென்ற இளைஞர்கள் இருவர் மாயம்
[2024-09-26 12:08:15] Views:[19]
நேற்று (25) மதியம் மகாவலி கங்கையில் நீராடச் சென்ற 5 இளைஞர்களில் இருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தெரிய வருகிறது.
வத்தேகம பிரதேசத்தில் வசிக்கும் 19 வயது மற்றும் 22 வயதுடைய இளைஞர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளதாகவும் காணாமல் போன இரு இளைஞர்களை தேடும் பணியை பொலிஸார் மற்றும் கடற்படையினர் இணைந்து மேற்கொண்டு வருவதாகவும் தெரிய வருகிறது.










