யாழில் பேருந்து சாரதியொருவருக்கு மர்ம நபர்களால் வாள்வெட்டு..!!
[2024-09-23 21:40:55] Views:[10]
இன்று மாலை யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தை நிறுத்தி மர்ம நபர்கள் சாரதியை சரமாரியாக வெட்டிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது
கொழும்புத்துறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தை மணியத்தோட்டம் 11வது குறுக்கு வீதியில் நிறுத்தி, குறித்த நபரை இரண்டு மோட்டார் சைக்கிள்களில் முகத்தை மூடிக் கொண்டு வந்தவர்கள் சரமாரியாக வெட்டியுள்ளனர்.
இச்சம்பவத்தினால் படுகாயத்திற்குள்ளான சாரதியி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.










