கடற்றொழிலுக்கு சென்றவர் சடலமாக மீட்பு
[2024-09-23 14:53:48] Views:[15]
யாழில் கடற்றொழிலுக்கு சென்றவர் படகினுள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என தெரிய வருகிறது.
இன்று (23) காலை குறித்த நபரின் சடலமானது பொன்னாலையில் கரையொதிங்கியிருந்த படகிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் உயரிழந்த நபர் நேற்று (22) மாலை 5.30 மணியளவில் அராலியில் இருந்து தனியாக கடற்றொழிலுக்கு சென்றுள்ளார் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.










