முதலாம் கட்ட வாக்கு எண்ணிக்கை நிறைவு: வேட்பாளர்கள் பெற்ற மொத்த வாக்கு விபரங்கள் இதோ..!!
[2024-09-22 18:55:41] Views:[15]
2024 ஜனாதிபதி தேர்தலில் முதலாம் கட்ட வாக்கு எண்ணிக்கை சற்று முன் நிறைவடைந்துள்ளது.
இந்த முடிவுகளுக்கு அமைய தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 5,634,915 வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார்.
சஜித் பிரேமதாச 4,363,035 வாக்குகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளனர்
ரணில் விக்கிரமசிங்க 2,299,767 வாக்குகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளனர்.
நாமல் ராஜபக்ஷ 342,781 வாக்குகளுடன் 4ம் இடத்தை பிடித்துள்ளார்.
மற்றும் பா.அரியநேத்திரன் 226,342 வாக்களுடன் 5ம் இடத்தை பிடித்துள்ளார்.
122,396 வாக்குகளை பெற்று திலித் ஜயவீர 6 ஆவது இடத்தை பிடித்துள்ளார்.
கே.கே பியதாச 47,528 வாக்குகளை பெற்று 7 ஆவது இடத்தை பிடித்துள்ளார்.
இதற்கமைய, வாக்குகள் அடிப்படையில் வெற்றிப் பெற்ற அநுர குமார திஸாநாயக்க 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெறாத காரணத்தினால் இரண்டாம் கட்ட விருப்பு வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.










