நாடளாவிய ரீதியில் ஊடரங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது..!!
[2024-09-21 23:58:35] Views:[12]
இன்று இரவு 10:00 மணி முதல் நாளை காலை 06:00 மணி வரை நாடளாவிய ரீதியாக ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த காலகட்டத்தில் பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளில் பணிபுரிபவர்கள் தங்களது உத்தியோகபூர்வ அடையாள ஆவணங்களை ஊரடங்குச் சட்ட அனுமதிப்பத்திரமாக எடுத்துச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெளிநாட்டுப் பயணத்திற்காக விமான நிலையத்திற்குச் செல்பவர்கள் தங்களது பயணச்சீட்டு மற்றும் பயண ஆவணங்களை எடுத்துச் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வெளிநாட்டு பயணங்களை முடித்துவிட்டு நாடு திரும்புபவர்கள் தங்கள் விமான டிக்கெட்டுகள் மற்றும் பிற பயண ஆவணங்களை ஊரடங்கு உத்தரவு பாஸ்களாக பயன்படுத்த முடியும் என பொலிஸ் ஊடகப் பிரிவினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.










