நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மீது இனந்தெரியாத குழு தாக்குதல்.!
[2024-09-21 12:53:59] Views:[11]
மட்டக்களப்பு பகுதியில் இனந்தெரியாத குழு நடத்திய தாக்குதலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கல்குடா தொகுதியின் ஐக்கிய மக்கள் சக்தியின் இணைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெயானந்தமூர்த்தியின் மீதே இவ்வாறு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
வாழைச்சேனையில் உள்ள அவரது வீட்டிற்கு நேற்று (20) இரவு சென்ற இனந்தெரியாத நபர்கள் அவரின் வீட்டின் மீது தாக்குதல்களை முன்னெடுத்துள்ளதுடன் அங்கு வைக்கப்பட்டிருந்த பதாகைகளும் கிழிக்கப்பட்டுள்ளன.
மூவரடங்கிய குழு ஒன்று இந்த தாக்குதலை மேற்கொண்டதாக ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்த ஜெயானந்தமூர்த்தி வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பரம் தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.










