மதுபோதையில் தேர்தல் பணி! ஒருவர் கைது!
[2024-09-21 10:52:52] Views:[15]
கேகாலை, தெரணியகல பிரதேசத்தில் மதுபோதையில் தேர்தல் பணியில் ஈடுபட்ட சாரதி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்
தெரணியகல பிரதேசத்தில் உள்ள வாக்களிப்பு நிலையம் ஒன்றிற்கு பணியாளர்களை அழைத்துச்சென்ற வேன் சாரதி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு வாக்குச் சீட்டுகள், வாக்குப்பெட்டிகள் மற்றும் பணியாளர்களுடன் வாக்களிப்பு நிலையத்திற்கு பயணித்த வேன் சாரதி கடமை நேரத்தில் மதுபோதையில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
வாக்குச் சீட்டுகள், வாக்குப்பெட்டிகள் மற்றும் பணியாளர்களை வேறு வாகனத்தில் கொண்டு செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.










