பேருந்து விபத்து - 17 பேர் காயம்
[2024-09-20 18:58:57] Views:[11]
இன்று (20) மொனராகலையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பஸ் ஒன்று மொனராகலை கும்புக்கன் 14 மைல்கல் அருகில் விபத்துக்குள்ளாகியதில் 17 பேர் காயமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது..
காயமடைந்தவர்கள் மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.










