கொழும்பில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி.!
[2024-09-19 11:55:16] Views:[9]
கொழும்பின் புறநகர் ஒன்றில் இனந்தெரியாத இருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (18) இரவு கொழும்பு, கொஹுவல, சரணங்கரா வீதியிலுள்ள கடையொன்றில் குறித்த துப்பாக்கிச் சுட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவத்தில் கடையின் உரிமையாளரான தெஹிவளை, நெதிமால பிரதேசத்தில் வசிக்கும் 43 வயதுடைய நபர் படுகாயமடைந்த நிலையில் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பில் கொஹுவல பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.










