தேர்தல் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை.!
[2024-09-18 12:22:46] Views:[11]
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போது தேர்தல் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு எச்சரித்துள்ளது.
தேர்தல் தினத்தன்று வாக்களித்த பின்னர் உடனடியாக வீடுகளுக்குச் செல்லுமாறும், வாக்களிப்பு நிலையங்களுக்கு கையடக்க தொலைபேசிகளை எடுத்துச் செல்வது தடை செய்யப்பட்டுள்ளதாகவும், காரணமின்றி வாக்குச் சாவடிகளில் அல்லது அருகில் இருக்க வேண்டாம் என்றும் நாட்டு மக்களை தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், வாக்களித்ததன் பின்னர் யாருக்கு வாக்களித்தீர்கள் என்பதை பகிரங்கமாக சொல்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை ஜனாதிபதித் தேர்தலுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் தயார் நிலையில் உள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.










