yarlathirady.com

யாழ் மாவட்ட வாக்கு எண்ணும் நிலையத்தில் கள ஆய்வு!

[2024-09-17 12:22:01] Views:[9]

யாழ்ப்பாணம் மாவட்ட வாக்கு எண்ணும் நிலையத்தின் ஒழுங்கமைப்பு, பாதுகாப்பு, பொது வசதிகள் மற்றும் நலனோன்பு வசதிகள் தொடர்பாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் தலைமையில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் வாக்கு எண்ணும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி பயன்படுத்தப்படவுள்ளது.

இந்நிலையில் அங்கு ஒழுங்கமைப்புக்கள் தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை கள ஆய்வு செய்யப்பட்டது.

இக் கள ஆய்வின் போது மண்டப ஒழுங்குகள், போக்குவரத்து, பொது வசதிகள், நலனோன்பு வசதிகள், மின்சார வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் போன்ற விடயங்கள் ஆய்வு செய்யப்பட்டது.

இதன் போது, எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

இக் கள ஆய்வில் உதவித் தேர்தல்கள் ஆணையாளர் இ.கி.அமல்ராஜ், வடமாகாணப் பிரதிப் காவல்துறைமா அதிபர் திரு ஏ. ஜே. காலிங்க ஜெயசிங்க, சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர், காவல்துறை பொறுப்பதிகாரிகள் மற்றும் உதவி தெரிவாட்சி அலுவலர்கள் பங்குபற்றினார்கள்.


சினிமாசெய்திகள்
வெளிவந்த விஜய்யின் ஜனநாயகன் படத்தின் வெளியீட்டு திகதி தொடர்பான விவரம்...!
2026-04-29 17:16:58
பல வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் விஜய் தனது கடைசிப்படமாக ஜனநாயகன் என்ற படத்தில் நடித்துள்ளார்
'திரிஷ்யம்-3' திரைப்படத்தின் அதிரடி அறிவிப்பு..!
2026-04-26 21:19:32
மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களிலொன்றான திரிஷ்யம், கடந்த 2013ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியாகி திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வெறும் ரூ.5 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம், ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் வெற்றியால், இப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.