yarlathirady.com

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு விசேட பாதுகாப்பு ;

[2024-09-17 10:19:34] Views:[10]

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளனர்.

38 வேட்பாளர்களில் 25 வேட்பாளர்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், 09 பேர் பாதுகாப்பு கோரவில்லை எனவும், 04 பேர் பாதுகாப்பு வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் குறிப்பிட்டு கையில், பாதுகாப்பு வழங்கப்படுவதற்கு முன்னர் பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட 24 மணித்தியால விசேட நடவடிக்கை அலுவலகங்களில் அறிக்கைகள் பெற்று அவசியமான பாதுகாப்பு வழங்கப்படும்.

பொலிஸாருக்கு மேலதிகமாக முப்படையினர், பொலிஸ் விசேட அதிரடிப்படை அல்லது சிவில் பாதுகாப்பு அதிகாரிகளும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்படுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

வேட்பாளர்கள் கலந்து கொள்ளும் கடைசி கூட்டத்திற்கு பாதுகாப்பு வழங்குவதற்கு 48 மணி நேரத்திற்கு முன், அந்த இடங்கள் தொடர்பில் உளவுத்துறை அறிக்கைகள் பெறப்படும்.

கூட்டத்திற்கு சில மணி நேரம் முன்னதாக தேவையான பாதுகாப்பை அளித்து கூட்டம் முடிந்த பின் அறிக்கைகள் பெறப்படும்.

வேட்பாளர்களின் கூட்டங்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு முன்பு, தேவையான பாதுகாப்பை வழங்குவதற்காக அந்தந்த பொலிஸ் நிலையங்களின் அதிகாரிகள், மூத்த பொலிஸ் கண்காணிப்பாளர், உதவிக் பொலிஸ் கண்காணிப்பாளர் மற்றும் பொலிஸ் நிலையத்திலிருந்து அறிக்கைகள் பெறப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தேர்தல் தினத்தன்று பாதுகாப்பு பணியில் பொலிஸ் நடமாடும் வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும், தேர்தல் ஆணைக்குழுவின் அறிவுறுத்தலின்படி தேர்தல் முடிந்து ஒரு வாரத்திற்கு தேவையான பாதுகாப்பை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


சினிமாசெய்திகள்
வெளிவந்த விஜய்யின் ஜனநாயகன் படத்தின் வெளியீட்டு திகதி தொடர்பான விவரம்...!
2026-04-29 17:16:58
பல வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் விஜய் தனது கடைசிப்படமாக ஜனநாயகன் என்ற படத்தில் நடித்துள்ளார்
'திரிஷ்யம்-3' திரைப்படத்தின் அதிரடி அறிவிப்பு..!
2026-04-26 21:19:32
மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களிலொன்றான திரிஷ்யம், கடந்த 2013ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியாகி திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வெறும் ரூ.5 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம், ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் வெற்றியால், இப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.