கிளிநொச்சியில் பெண்ணொருவர் 95 கிலோ கேரள கஞ்சாவுடன் கைது..!
[2024-09-16 12:15:39] Views:[10]
95 கிலோ கேரள கஞ்சாவுடன் பெண்ணெருவர் இன்று விசேட அதிரடி படையினரால் கிளிநொச்சியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து கிளிநொச்சி, பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வத்திரையான் பகுதியில் சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 95 கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டதுடன், சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் அனைத்தும் பளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.










