முல்லைத்தீவில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி பயங்கர விபத்து!
[2024-09-15 19:14:40] Views:[10]
இன்றையதினம் காலை (15) இரண்டு மோட்டார் சைக்கிள்கள் முல்லைத்தீவில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிய வருகிறது.
பரந்தன் நோக்கி பயணித்த இரு மோட்டார் சைக்கிள்கள் மோதியதாகவும் மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்ற சாரதி இருவரும் காயங்களுக்குள்ளாகிய நிலையில் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த 45 வயது மதிக்கதக்க பெண், சிவநகரை சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க இளைஞனுமே காயங்களுக்குள்ளானதாகவும் தெரியவந்துள்ளது.










