வாக்கு மோசடி செய்யபவர்களுக்கு கடும் தண்டனை...!!!
[2024-09-15 11:10:13] Views:[11]
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது மோசடியான வாக்குகளை அல்லது அதற்கு ஆதரவளிப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுமென தேர்தல் ஆணைக்குழுவின் மேலதிக ஆணையாளர் சிந்தக குலரத்ன அறிவித்துள்ளார்.
தேர்தல் தொடர்பில் உயர் நீதிமன்றத்தால் குற்றம் நிரூபிக்கப்பட்ட ஒரு நபருக்கு 12 மாதங்களுக்கும் மேலான சிறைத்தண்டனை அல்லது 2 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்படும்.
இந்தக் குற்றச்சாட்டில் குற்றம் நிரூபிக்கப்பட்ட ஒருவருக்கு 7 ஆண்டுகளுக்கு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கவும் தேர்தலில் வாக்களிக்கத் தகுதியற்றவர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.










