க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான அறிவித்தல்..!!
[2024-09-15 10:49:38] Views:[11]
எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை நேற்று காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு முதல் பரீட்சைகள், கால அட்டவணைகள் மற்றும் பரீட்சை அட்டவணைகள் என்பனவற்றை தாமதமின்றி நடைமுறைப்படுத்த முடியும் எனவும் எதிர்வரும் 2025 ஜனவரி 20 ஆம் திகதி பாடசாலை முதலாவது தவணையின் முதல் நாள் ஆரம்பமாகிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.










