தந்தையால் சீரழிக்கப்பட்ட 15 வயது சிறுமி..!
[2024-09-15 06:03:57] Views:[11]
வவுனியா, ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் தந்தை மற்றும் இளைஞர் ஒருவரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட நிலையில் சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஓமந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த இரகசிய தவலையடுத்து, பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியை மீட்ட பொலிசார் குறித்த சிறுமியிடம் வாக்கு மூலங்களை பதிவு செய்ததுடன், வைத்திய பரிசோதனைக்கு அனுப்பிய நிலையில் சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
விசாரணைகளின் போது கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் குறித்த சிறுமியை தந்தை துஷ்பிரயோகம் செய்தமை தெரியவந்துள்ளதுடன், குறித்த சிறுமியின் வீட்டில் தங்கியிருந்த இளைஞர் ஒருவரும் கடந்த மாதம் 28 ஆம் திகதி குறித்த சிறுமியை துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும் சிறுமி தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, நேற்று (14) சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளதுடன், இளைஞரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் ஓமந்தைப் பொலிசார் தெரிவித்தனர்.
இதேவேளை, குறித்த தந்தை தனது மூத்த மகளை 2020 ஆம் ஆண்டு துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார், அது தொடாடபான வழக்கு விசாரணை வவுனியா மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்ற நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.










